தமிழில் குடமுழுக்கு நடத்த கோரி வழக்கு: 27-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா எப்படி நடத்தப்பட உள்ளது என்பதை தெளிவுபடுத்தக்கோரி, இந்து சமய அறநிலையத்துறைக்கு   உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தஞ்சாவூரைச் சேர்ந்த செந்தில் நாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,  தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது என்றும், அந்தக் குடமுழுக்கை தமிழில் நடத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், குடமுழுக்கு நிகழ்வு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்தக்கோரி இந்து சமய அறநிலையத்துறை , மத்திய தொல்லியல் துறை  , தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், கோவில் தேவஸ்தான நிர்வாகி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். இந்த வழக்கு, வரும் 27-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Exit mobile version