டெல்லியில் 6 மக்களவை தொகுதிக்கான காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு

யூனியன் பிரதேசமான டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதல்வரும், டெல்லி காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல் சாந்தினி செளக், கிழக்கு டெல்லி உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு டெல்லிக்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக கடந்த சில நாட்களாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இதேபோல் பாஜகவும் டெல்லியின் 4 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்சவர்தன் சாந்தினி சவுக் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version