கொரோனாவால் அதிகம் பாதித்த 9 நாடுகளின் பட்டியல் வெளியீடு

கொரோனா வைரஸால் சர்வதேச அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட 9 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கபட்ட 9 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக சீனா உள்ளது. சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 213 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், 80 ஆயிரத்து 860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு அடுத்த படியாக கொரோனாவால் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இதுவரை ஆயிரத்து 809 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 ஆயிரத்து 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலிக்கு அடுத்தபடியாக ஈரானில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு 724 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 13 ஆயிரத்து 938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவில் 8 ஆயிரத்து 236 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 பேர் மரணித்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் 7,845 பேர் பாதிக்கபட்டுள்ளனர். 292 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஜெர்மனியில் 5,813 பேர் பாதிக்கபட்டுள்ளனர் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரான்ஸில் 5,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 127 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் 3,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரிட்டனில் 1,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Exit mobile version