சூடான் உயிரியல் பூங்காவில் உடல் நலிவுற்று காணப்படும் சிங்கங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில், அவற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள அல் குரோஷி உயிரியல் பூங்காவில் போதிய ஊட்டச்சத்து இன்றி சிங்கங்கள் நலிவுற்று காணப்படும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், உடல்நலிவுற்று காணப்படும் 5 சிங்கங்களுக்கு போதிய ஊட்டசத்து வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பூங்கா நிர்வாகிகள், சிங்கங்கள் நோய் வாய்ப்பட்டுள்ளதால் நலிவுற்றதாகவும், அவற்றுக்கு உணவு வழங்க போதிய நிதி இல்லாத காரணத்தால் சொந்த பணத்தை கொண்டு பராமரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.