கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா..தோழிகளை திருமணம் செய்த இளைஞர்

இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் 2 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார்.அவர்கள் திருமணத்தின் போது எடுத்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நம் நாட்டில் ஒரு நேரத்தில் ஒரு திருமணம் செய்துகொள்வதற்கே அனுமதியுள்ள நிலையில், இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண் தோழிகளை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார்.அவர்களின் வழக்கப்படி திருமணம் செய்தால் ஆண் வீட்டிலிருந்து தான் பெண் வீட்டிற்கு வரதட்சனை கொடுக்க வேண்டும்.

இதனை அறிந்துமே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் மற்றொரு பெண் வருத்துமடைவாள் என்ற காரணத்திற்காக இரண்டு பெண்களையுமே அந்த இளைஞர் முறைப்படி திருமணம் செய்துள்ளார்.

தற்போது இவர்களின் திருமண புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version