இந்தோனேசியாவின் தலைநகர் மாற்றம்.. இனி ஜகார்த்தா இல்லை..!

உலக நாடுகளில் முக்கியமான தென்கிழக்கு ஆசிய நாடு இந்தோனேசியா ஆகும். அதன் தலைநகராக தற்போது வரை இருக்கும் ஜகார்த்தா-வானது கடலில் மூழ்கி வரும் நகரமாக உள்ளது. உலகிலேயே விரைவில் கடலில் மூழ்கும் நகரம் என்று இந்த நகரத்தினை கூறுகிறார்கள் சூழலியலாளர்கள். எனவே மக்களை சிறிது சிறிதாக இந்நகரைவிட்டு இடம்பெயர்ந்து செல்லுமாறு இந்தோனேசியா அரசு கூறிவருகிறது. அதற்கு பதிலாக தலைநகரை போர்னியோ தீவுக்கு மாற்றும் பணியில் இந்தோனேசிய அரசு ஈடுபட்டு வருகிறது. தற்போதைய ஜகார்த்தா நகரானது 2050 ஆம் ஆண்டிற்குள் மூன்றில் ஒரு பங்கு முற்றிலும் கடலால் விழுங்கப்பட்டுவிடும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்தோனேசியாவின் தலைநகரமாக போர்னியோ தீவானது அடுத்த வருடம் ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version