’மலர்ந்தும் மலராத’பாடலை பாடும் இங்கிலாந்து பெண் :வைரலாகும் வீடியோ

சிவாஜி கணேசன் நடித்த பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’மலர்ந்தும் மலராத’ பாடலை இங்கிலாந்து பெண் பாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் சமந்தா.இவர் தமிழகத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.இவருக்கு தமிழ் மொழி மீதும் தமிழரின் பண்பாடு மீதும் ஆர்வம் அதிகம்.எனவே தமிழ் பெண்கள் போல் சேலை உடுத்தி நெற்றி பொட்டு வைத்துக்கொள்வதை தான் இவரும் பின்பற்றி வருகிறார்.மேலும் தமிழ் பாடல்களை பாடி அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிடுவார்.சில நாட்களுக்கு முன்பு மெர்சல் திரைப்படத்திலிருந்து’நீ தானே’ பாடலை பாடி வீடியோ வெளியிட்டிருந்தார்.

தற்போது சிவாஜி கணேசன் நடித்த பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ’மலர்ந்தும் மலராத’ பாடலை பாடி வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ மூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும்,இவரின் இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version