நிர்மலா சீதாராமனுக்கு துணை முதல்வர் கடிதம் மூலம் பாராட்டு

மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடிதம் மூலம் பாராட்டு தெரிவித்து உள்ளார். 2019 – 2020 ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நிதி அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாகவும், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் விதமாகவும், நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மகளிருக்கான முன்னேற்றம் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் விதமாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் மாநிலங்களின் ஒத்துழைப்பு மற்றும் கருத்தொற்றுமையோடு நாட்டின் வளர்ச்சியை முன்னேடுத்து செல்வதற்கான நம்பகத்தன்மை இந்த நிதிநிலை அறிக்கை மூலம் அதிகரித்துள்ளதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version