வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்!

விழுப்புரம் – புதுச்சேரி சாலை, சண்முகபுரம் காலனி, பவர் ஹவுஸ் சாலை, மருதூர்மேடு, கல்லூரி நகர், கிழ்ப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திறந்த வேனில் வீதிவீதியாக சென்று, அவருக்கும், பெண்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், மலர் தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சருடன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட, 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தின் ஊர்வலமாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Exit mobile version