ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா வீரர்கள் பேட்டிங் செய்தனர். அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
நிதானமாக விளையாடி வந்த கவாஜா, மார்ஷ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக ஹேண்ட்ஸ்கோம் 58 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர் சஹால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். புவனேஸ்வர் மற்றும் ஷமி ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து 231 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது.