பாலியல் குற்றசாட்டு வழக்கில் கைதான பிராங்கோ முல்லக்கலிற்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் பிராங்கோ முல்லக்கல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து 14 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து பேராயர் பதவியில் இருந்து பிராங்கோவை போப் நீக்கினார்.
அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் பினை கோரி பிராங்கோ முல்லக்கல் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை அடிப்படையில் பினை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.