முல்லை பெரியார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கேரள அரசு கார் பார்க்கிங் அமைத்ததற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஆனவாய்ச்சல் அருகே வனப்பகுதியில், தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசு ஆக்கிரமித்து கார் பார்க்கிங் அமைத்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆனவாய்ச்சல் பகுதி தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என்றும் புலிகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியாகும் என்று கூறப்படுகிறது. அந்த இடத்தை விரிவுப்படுத்தும் வகையில் கேரள அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு கேரள அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறி விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.