பெங்களூரில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டத் தடை

பெங்களூரில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தண்ணீர் தட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து கட்டுமான நிறுவனங்கள், வீடு மனை விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனங்கள் தண்ணீர் பற்றி கவலைப்படாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விடுகின்றன. வீடுகளை விற்கும் போது அவர்களால் குடிநீருக்கு உத்தரவாதம் கொடுக்க முடிவதில்லை. இதனால் பெரும்பாலும் டேங்கர் லாரிகளையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருவதாக அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

இன்னும் 5 ஆண்டுகளில் பெங்களூருவுக்கு ஷராவதி, லிங்கனமக்கி நீராதங்களில் இருந்து நீர் எடுக்கும் பணி நிறைவடையும் என்றும் அதன்பின் குடிநீர் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்றுன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version