மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகம் மீண்டும் பிடிவாதம்

மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக, வரும் 7-ம் தேதி, நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது. இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார், மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு சாத்தியக்கூறு அறிக்கை கேட்டுள்ளது என்றும், இதற்காக, 7-ம் தேதி நிபுணர் குழுவுடன் சென்று, அணை கட்டும் பகுதி, நீர்த்தேக்க பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Exit mobile version