கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியை சார்ந்த 15 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் குமாரசாமி அரசுக்கு எதிராக செயல்பட்ட மற்றவர்களையும் சேர்த்து 17 எம்.எல்.ஏக்களை அன்றைய சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். இதனால் அவர்கள் சட்டசபையின் பதவிக் காலம் முடியும் வரை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் சபாநாயகர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக தங்களை தகுதி நீக்கம் செய்துள்ளதாகவும் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.