கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியில் நீடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கடந்த இரண்டு வாரமாக உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது. ஆளும் கூட்டணியின் மீது அதிருப்தியடைந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ராமலிங்கரெட்டியை நேரில் சந்தித்து பேசிய குலாம்நபி ஆசாத் அவரை சமாதானப்படுத்தினார். இதேபோன்று எம்.எல்.ஏ. நாகராஜிடம், டி.கே.சிவகுமார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் மும்பையில் தங்கியுள் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதனிடையே முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நாளை முடிவு செய்யப்படுகிறது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக தகவல் பரவியுள்ளது, இதையடுத்து ரிசார்ட்டில் தங்கியுள்ளா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை மாநில தலைவர் எடியூரப்பா சந்தித்து பேசியுள்ளார்.