கன்னியாகுமரி மாவட்டத்தில் 45 ஆயிரம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான விளக்கம் தர வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 47 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.