கல்லணையில் நீர் கிடைக்காததற்கு காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாததே!! -விவசாயிகள் வேதனை

கர்நாடக அரசிடம் இருந்தும் தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை தமிழ்நாடு அரசு பெற்றுத் தந்தால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை சாகுபடிகள் செய்ய இயலும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து கடந்த 16 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கால்வாய்கள் சீரமைக்கப்படாததால், பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் செல்லவில்லை. மேலும் தண்ணீர் கடைமடைக்கு வந்து சேருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக அரசிடம் இருந்து தேவையான நீரை தமிழ்நாடு அரசு பெற்றுத் தந்தால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.

 

Exit mobile version