கடும் பனிமூட்டம்..விடியலை காணாத வீதிகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக தொடர்ந்த பனிமூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். குத்தாலம்,
தரங்கம்பாடி, மங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாது வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். மேலும், பனிமூட்டம் காரணமக நெற்பயிர்கள் பல்வேறு நோய்தாக்குதலுக்கு உள்ளாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடலூரில் மலைப்பிரதேசங்களை மிஞ்சும் அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். கடந்த சில நாட்களாக காலையில் வெயிலும் மாலை நேரங்களில் குளிருடன் கலந்து மிதமான சூழலும் ஏற்பட்டு வரும் நிலையில் காலை 8 மணி ஆகியும் பனிமூட்டம் குறையாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதேபோல் சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. வல்லம்படுகை, வேலங்குடி, சிதம்பரம் புறவழிச் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுங்குளிருடன் ஏற்பட்ட பனி மூட்டத்தால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. மேலும் பணிக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தொடரும் கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், வீராணம் ஏரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்றாவது நாளாக பனி மூட்டத்தால் நடைபயிற்சி செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. மேலும், தொடர்ந்து ஏற்படும் பனி மூட்டத்தால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளுக்கு போதுமான மருத்துவ வசதியை விடியா அரசு செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version