விரைவில் வெப் சிரீஸில் களமிறங்கும் காஜல் அகர்வால்..

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் வெப் சிரீஸில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் பழனி திரைப்படம் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால்.தொடர்ந்து பொம்மலாட்டம், நான் மகான் அல்ல,மாவீரன், துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.பின்பு கவலை வேண்டாம், மாரி, மெர்சல், விவேகம் ஆகிய திரைப்படங்களில் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அடுத்த கடத்திற்கு சென்றுவிட்டார்.

கங்கனா ரனாவத் நடித்த குயின் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் நடித்து வரும் நிலையில், தற்போது ஜெயம் ரவியுடன் கோமாளி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது .

இப்படி படு பிசியாக இருக்கும் காஜல் அகர்வால் வெப் சிரீஸிலும் நடிக்க இருக்கிறார்.மங்காத்தா திரைப்படம் மூலம் தல ரசிகர்களை மிரள வைத்த இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் இந்த வெப் சிரீஸ் உருவாகிறது.விரைவில் வெப் சிரீஸ் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version