நான் மெய்மறந்து விட்டேன் : இன்ஸ்டாவில் காஜல் பதிவு

நடிகை காஜல் அகர்வால் முதல்முறையாக தாஜ் மஹால் சென்று, அங்கு அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு திரைத்துறையில் ஒரே நேரத்தில் கலக்கி வரும் நடிகை காஜல் அகர்வால்.சமீபத்தில் காஜல் நடிப்பில் வெளிவந்த கோமாளி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,அடுத்து குயின் திரைப்படத்தின் ரீமேக்கான காஜல் நடித்த ’பாரிஸ் பாரிஸ்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.இதனைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் இந்தியன் – 2 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

 

இப்படி பிசியாக நடித்துக்கொண்டு இருந்தாலும் இன்று நடிகை காஜல் அகர்வால், தாஜ் மஹால் சென்றுள்ளார்.அங்கு அவர் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு’நான் முதன்முறையாக தாஜ் மஹாலுக்கு வந்துள்ளேன்.நான் இதை பார்த்தவுடன் மெய்மறந்து விட்டேன்.தாஜ் மஹாலின் அழகை பற்றி மிகவும் கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால் தற்போது இவற்றின் கட்டிடக்கலை, உட்புறங்களின் விவரம் ஆகியவற்றை உணர்கிறேன் என திகைத்து பதிவிட்டுள்ளார்.

 

சமூக வலைதளங்களில் active-ஆக இருக்கும் நடிகைகளில் காஜலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version