மதுரையில் கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை உயர் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டார்.
கீழடியில் 4மற்றும் 5ஆம் கட்ட அகழாய்வில் கிடைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கதை சிற்பங்களும், சூது பவள மணிகளும், விளையாட்டுப் பொருட்களும், உறை கிணறுகள், செங்கல் கட்டுமானங்கள், மிகச் சிறந்த நீர் நிர்வாகத்திற்கான வடிகால் அமைப்புகள் போன்றவைகளை மதுரை உலக தமிழ்சங்கத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் கண்காட்சியாக பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழடி அகழாய்வு கண்காட்சியினை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்.