ஈரோட்டில் வியாபாரி வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த போது அறையை பூட்டிவிட்டு 62 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ரகுபதிநாயக்கன் பாளையம் ரெயின்போ காலனியை சேர்ந்த கெமிக்கல் எக்ஸ்போர்ட் வியாபாரி ராஜா என்பவர், இரவு குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் கதவை உடைந்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளர்கள் தூங்கும் அறையை தாளிட்டு, மற்றொரு அறையிலிருந்த பீரோவை உடைத்து கொள்ளை நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
அதிகாலை வெளியே தாளிட்டிருப்பது தெரிந்து கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்துள்ளனர். பின்னரே வீட்டில் கொள்ளை நடந்தது ராஜாவுக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். இதில், 62 சவரன் நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்துள்ளது.