டிஎன்பிஎஸ்சி முறைகேடு மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் போல் செயல்பட்டதாக ஜெயக்குமார் வாக்குமூலம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் போல் செயல்பட்டதாக ஜெயக்குமார் வாக்குமூலம்டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்ய, மாவட்டத்திற்கு ஒரு ஏஜெண்ட் என ‘மல்டிலெவல் மார்க்கெட்டிங்’ நிறுவனம் போல் செயல்பட்டதாக, ஜெயக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

2016ம் ஆண்டு வி.ஏ.ஒ தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக, மேலும் 2 வி.ஏ.ஒக்களை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், நீதிமன்றக் காவலில் இருக்கும் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரிடம், 5வது நாளாக  நடைபெற்ற விசாரணையில், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஓம்காந்தன், குரூப் 4, குரூப் 2A, வி.ஏ.ஓ ஆகிய 3 தேர்வுகளிலும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், ஓம்காந்தன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரையும், ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களுக்கு அழைத்துச் சென்று, முறைகேடு நடந்தது எப்படி என்பது குறித்து நடித்துக்காட்ட வைத்து, அவற்றை சிபிசிஐடி காவல்துறையினர் பதிவு செய்தனர். மேலும், ஜெயக்குமாரிடம் நடைபெற்ற விசாரணையில், முறைகேட்டில் ஈடுபட, மாவட்டத்திற்கு ஒரு ஏஜெண்டு என, ‘மல்டிலெவல் மார்க்கெட்டிங்’ நிறுவனம் போல் செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, மாவட்ட வாரியாக ஏஜெண்டாக செயல்பட்டவர்கள் யார் யார் என்பது குறித்தும், முறைகேடு நடைபெற்ற மையங்கள் குறித்தும், ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version