அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில் அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதில், தேனி, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகளும், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் களமிறக்கப்பட்டனர்.  குழுக்களாக பிரிக்கப்பட்ட வீரர்கள், வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகத்துடன் அடக்கி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டு,மாலை 4 மணிக்கு நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் போட்டியில் அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் அடங்காத சிறந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

Exit mobile version