ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்த 6 மாதங்களில் ஆந்திராவை இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவேன் என்றார். முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். மாநில மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதே தனது பணியாக இருக்கும் என தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 5 ஆண்டுகளில் 40, 50 முறை பிரதமர் மோடியை சந்தித்ததாகவும் ஒவ்வொரு முறையும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்குமா? என்ற கேள்விக்கு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.