ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி-ஹைதராபாத் இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3-வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இன்று மோதுகிறது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளை வீழ்த்திய டெல்லி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளிடம் தோல்வி கண்டது.

அதேபோல், 3 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் மற்றும் பெங்களூருவை அணிகளிடம் வெற்றியும், கொல்கத்தா அணியுடன் தோல்வியும் கண்டது. இந்நிலையில், டெல்லி அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றும் பட்சத்தில் ஹைதராபாத் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும்.

அதேபோல், தோல்வியை தவிர்க்க டெல்லி அணியும் போராடும் என்பதால், இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version