வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதலீட்டாளர்களை நியூயார்க்கில் சந்திக்க இருக்கிறார்.
நியூயார்க்கில், முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர், தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். முதலீடுகளை ஈர்க்க “யாதும் ஊரே” என்ற தனி சிறப்பு மற்றும் வலைதளம் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில், ரூ.60 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட “யாதும் ஊரே” தனி சிறப்பு மற்றும் வலைதளத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.