இந்தியாவிலேயே முதன்முறையாக கைபேசி மூலம் நவீன தொழில் நுட்பத்தில் அம்மா சமுதாய வானொலி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்ப அம்மா சமுதாய வானொலியை சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட அம்மா சமுதாய வானொலி மூலம், மகளிர் சுய உதவி குழுவில் உள்ள ஒரு கோடி உறுப்பினர்களுடன் முதலமைச்சர் உரையாட இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் சாதனைகள், முக்கிய தகவல்கள் உடனுக்குடன் கடைகோடி கிராமம் வரை கொண்டு செல்ல அம்மா சமுதாய வானொலி பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.