டிடிவி தினகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து அவதூறாக பேசியதாக, டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் கடந்த 23-ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்த டிடிவி தினகரன், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசினார். டிடிவி தினகரனின் பேச்சு அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் புகார் அளித்தார். இதையடுத்து டிடிவி தினகரன் மீது 5 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version