டி.என்.பி.எஸ்.சி தேர்வில் புதிய சீர்திருத்தங்கள் அறிமுகம்

டி.என்.பி.எஸ்.சி தேர்வில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுதொடர்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொகுதி 4 மற்றும் தொகுதி 2ஏ போன்ற தேர்வுகளுக்கு, முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளாக 2 நிலைகளில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு 9 மணிகே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 மணிக்கு மேல் வரும் தேர்வர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள், அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவேண்டும் என்றும், கேள்விகளுக்கு விடையளிக்க தவறும் பட்சத்தில், விடைத்தாள்கள் செல்லாததாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத் தாள்களை, அடையாளம் காண முடியாத வகையில், கையொப்பத்திற்குப் பதிலாக இடதுகை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களை பாதுகாப்பாக தேர்வாணைய அலுவலகத்திற்கு கொண்டு செல்ல, ஜி.பி.எஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version