கோலாகலமாக தொடங்கிய 50 வது கோவா சர்வதேச திரைப்பட விழா

50 வது கோவா சர்வதேச திரைப்பட திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

50 வது கோவா சர்வதேச திரைப்பட திருவிழா இன்று தொடங்கிய நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். மொத்தம் 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த திரைப்பட விழாவில், 76 நாடுகளை சேர்ந்த சுமார் 200 திரைப்படங்கள் திரையிடப் பட உள்ளன. இதில் 36 இந்தி திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன. இதில், தமிழ் படங்களான பார்த்திபனின் ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன. கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக விழா தொடங்கியது. கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் 50வது பொன் விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு தபால் தலையும் வெளியிடப்பட்டது, இந்த விழாவில், இந்தியா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version