இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்

இந்தியாவில் கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்சிகள் முற்றிலும் தடை செய்யப்படவேண்டும் என்று அதற்காக அமைக்கப்பட்ட குழு அறிக்கை சமர்பித்துள்ளது.

இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளை சட்டப்பூர்வமாக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை மத்திய நிதியமைச்சகம் கடந்த 2017 ஆம் ஆண்டு அமைத்திருந்தது. அந்த குழு தற்போது தனது அறிக்கையை சமர்பித்துள்ளது. அதில், கிரிப்டோ கரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சிகளால் உண்மையான பணத்தை போன்று செயல்பட முடியாது என்றும் இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகள் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்தினால், அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் தடை சட்டத்தையும் வடிவமைத்துள்ளது.

Exit mobile version