கடந்த அக்டோபர் மாதம் விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குஜராத்தில் புதிதாக சீரமைக்கப்பட்ட மோர்பி பாலத்தில் கூடினர். நிர்ணயிக்கப்பட்ட எடையை தாண்டி பாலத்தின் மீது மக்கள் நின்றதாலும், தரமற்ற முறையில் சீரமைக்கப்பட்டதாலும் பாலத்தின் கயிறு அறுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 135 பேர் ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். பாலத்தை பராமரிக்க ஒப்பந்தம் எடுத்த ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேலிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு அனுமதி கோரியது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஜே.கான், ஜெய்சுக் பட்டேலை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
மோர்பி பாலம் விபத்து தொடர்பாக ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் விசாரணை!
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: accident gujaratInquiringmanaging director of OrevaMorbi bridge
Related Content
தொடரும் ரயில் விபத்துகள்...!! தெலுங்கானாவில் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸில் பயங்கர தீ விபத்து!
By
Web team
July 8, 2023
கவனக் குறைவு.. சாலையில் மறைவு! சென்னை மெரினா சாலையில் துயர சம்பவம்!
By
Web team
June 26, 2023
ஒடிசா ரயில் விபத்தில் 101 பேர்களின் உடலை அடையாளம் காண முடியவில்லை!
By
Web team
June 7, 2023
கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியிருப்பது 4 ரயில்களா? 3 ரயில்கள் என்று சொல்வதன் பின்னணி என்ன?
By
Web team
June 3, 2023
இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலை!
By
Web team
February 22, 2023