சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தி இந்திய விஞ்ஞானிகள் வரலாற்று சிறப்பை நிகழ்த்தியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் 2 வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இதுவரை எந்த விண்கலமும் தரையிறங்காத நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது. இஸ்ரோவின் இந்த சாதனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிகழ்வால் இந்திய நாடே பெருமை கொள்வதாகவும், இது இந்திய விண்வெளி துறையின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு சில நாடுகளே நிலவிற்கு விண்கலம் அனுப்பியுள்ள நிலையில், நமது நாடும் இடம் பிடித்துள்ளதற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கும் பொறியியல் வல்லுநர்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சாதனை நாட்டின் இளைஞர்களை அறிவியல் துறையில் மேம்படுத்த ஊக்கமளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.