இந்தியாவின் உள்கட்டமைப்பு இரட்டை இலக்கமாக அதிகரிப்பு: பிரதமர் மோடி

இந்தியாவின் உள்கட்டமைப்பிற்கான முதலீடு இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி, ரியாத் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். இந்தியா, உள்கட்டமைப்பிற்காக 1.5 டிரில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறிய பிரதமர் மோடி, தற்போது இந்தியாவின் உள்கட்டமைப்பில் முதலீடு இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் மற்றும் ஜோடார் நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, 2 நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.

Exit mobile version