இலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களை, இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை கருத்து தெரிவித்துள்ளது.
ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை, இலங்கை அரசுக்கு தெரிவித்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. நட்பு நாடு என்ற முறையில் ஜனநாயகமும், அரசியமைப்புச் சட்டமும் காக்கப்பட வேண்டும் என இந்தியா விரும்புவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இலங்கை மக்களுக்கு தேவையான ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்ய, இந்தியா எப்போதும் தயாராக உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.