உலக கோப்பை ஹாக்கி: இந்தியா – நெதர்லாந்து இன்று மோதல்

உலக கோப்பை ஹாக்கி காலிறுதியில் இந்திய அணி பலம் வாய்ந்த நெதர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது.

14-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஷ்வரத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெறுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. 3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணி ‘லீக்‘ ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 1-4 என்ற கணக்கில் தோற்றது.

இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்திய அணிக்கு நெதர்லாந்தை வீழ்த்துவது கடும் சவாலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version