உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது

 

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் கனடாவை 5-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, லீக் சுற்றில் பெல்ஜியம், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நிலையில், கனடாவை இன்று எதிர் கொண்டது. இதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தியது.

ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்தில், இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் முதல் கோலை அடித்தார். இதனையடுத்து கனடாவின் வான் சன் ஒரு கோல் அடித்து சமநிலை செய்தார். இதன் பிறகு, 46-வது நிமிடத்தில், சிங்கலனா சிங்கும், 47-வது மற்றும், 57-வது நிமிடத்தில் லலித் உபாத்யாயும், 51-வது நிமிடத்தில் அமித் ரோஹிதாசும் ஒரு கோல் அடித்து இந்தியா வெற்றி பெற உதவினர்.

Exit mobile version