உலக கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டி : பெல்ஜியம்-நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை…

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே உலக கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், பெல்ஜியம் நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. 14 வது ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறுகிறது. தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில், முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் 6 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்திய பெல்ஜியம் முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து ஆட்டம் சம நிலையானது.

இதனையடுத்து இந்த உலக கோப்பையில் முதன் முதலாக கொண்டு வரப்பட்ட பெனால்டி ஷாட் முறையில் 4 க்கு 3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நெதர்லாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் நெதர்லாந்து பெல்ஜியம் அணிகள் மோத உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடைபெறும் 3 வது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

Exit mobile version