மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில், இந்திய அணி அயர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது.
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. ‘பி’பிரிவில் இடம் பெற்றுள்ள ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 34 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
இதனையடுத்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய தனது 3-வது போட்டியில் அயர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது.
அதேபோல் தனது முந்தைய இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவிய அயர்லாந்து ‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்க்க போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.