ரஷியாவின் தூரக் கிழக்கு நாடுகள் வளர்ச்சிக்கு ரூ.7200 கோடி கடனுதவி: பிரதமர் மோடி

தூரக் கிழக்கு நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா ஏழாயிரத்து இருநூறு கோடி ரூபாய் கடன் வழங்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் முயற்சிகள், தூரக்கிழக்கு நாடுகளின் நலனுக்கு மட்டுமல்லாமல் மனிதகுலத்தின் நலனுக்கானது எனத் தெரிவித்தார்.

Exit mobile version