2024ல் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும்: அமித் ஷா

2024 ஆண்டில் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்துவது தான், மத்திய அரசின் இலக்கு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 250 நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, உலகளவில் 11-வது இடத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை கடந்த 5 ஆண்டுகாளில் 5-வது இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னேற்றியுள்ளதாக கூறினார்.

2024ல் உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என்று கூறிய அவர், இதுதான் பிரதமர் மோடியின் இலக்கு என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version