தமிழ்நாடு வளர்சி பெற… இதைச் செய்யுங்க : ஐடியா கொடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து, திறந்த வேனில் நின்றபடி உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்கு சேகரித்தார். மேலும், சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, வேளச்சேரி அதிமுக வேட்பாளர் அசோக், எழும்பூர் தொகுதி வேட்பாளர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோரை ஆதரித்தும் அமித் ஷா பரப்புரை மேற்கொண்டார்.

தேனாம்பேட்டை சிக்னலில் இருந்து பாண்டி பஜார் வரை, பேரணியாக சென்ற அமித் ஷாவுக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த அதிமுக கூட்டணி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தொண்டர்களை பார்த்து கை அசைத்தும், மலர்களை தூவியும் அமித் ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

Exit mobile version