'ஜூலை-1'-தேசிய மருத்துவர்கள் தினம் இன்று…

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்க உருவாக்கப்பட்ட தேசிய மருத்துவ தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உயிர் காக்கும் மருத்துவர்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்…

 

ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாளை மருத்துவ தினமாக கடைபிடித்து வரும் நிலையில், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவ தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாங்கிப்பூரில் 1882-ம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தவர், மருத்துவர் பிதான் சந்திர ராய். சிறந்த மருத்துவராகவும், விடுதலை இயக்க போராளியாகவும் புகழ் பெற்ற இவர், மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராகவும் பதவி வகித்தார். இவரது சாதனைகளை கருத்தில் கொண்டே இந்தியாவில் அவரது பிறந்த நாளான ஜூலை 1-ஆம் தேதியை, தேசிய மருத்துவர் தினமாக கடைபிடித்து வருகிறோம்.

 

இப்போதெல்லாம், மருத்துவர்கள் என்று சொன்னால், நம் எண்ணங்களில் கொரோனா பெருந்தொற்றே கண்முன் வந்து நிற்கிறது. ஓராண்டுக்கும் மேலாக 24 மணி நேரமும் கொரோனாவுக்கு எதிராக தன்னுயிரை பொருட்படுத்தாமல் போராடி வரும் முதல் முன்களப் பணியாளர்கள் மருத்துவர்களே.

ஒருநாள் முழுவதும் நோயாளிகளுடன் வாழ்ந்துவிட்டு தங்கள் வீட்டுக்கு செல்லும் மருத்துவர்கள், ஆசையாய் ஓடி வரும் குழந்தையை கூட தூக்கிக் கொஞ்சி மகிழ முடியாத சூழ்நிலை. மனைவிக்கோ, கணவனுக்கோ, குழந்தைகளுக்கோ தொற்று பரவிடுமோ என அச்சம். அனைத்தும் சேர்ந்து உளவியல் ரீதியான பாதிப்பையும் சந்தித்து வருகின்றனர், மருத்துவர்கள்.

பாதுகாப்பான இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா நோயாளிகளின் அருகே சென்று அவர்களை தொட்டு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களை தெய்வத்திற்கு ஈடாக2
தங்கள் உயிரை பணயம் வைத்து செய்யும் அவர்களது சேவையைப் பாராட்டி, மருத்துவர்கள் தினமான இன்று அவர்களுக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

Exit mobile version