விடியா அரசின் கொள்(ளை)கை! மீண்டும் உயரும் மின் கட்டணம்! ஜூலை 1-லிருந்து நடைமுறை!

மின் கட்டனம் உயர்த்தப்பட்டு ஒன்பது மாதங்களே ஆன நிலையில் ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, இந்த வருடம் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக, 4.70 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்ப உள்ளது.

தமிழக மின்வாரியம் நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பு கட்டணைத்தை  உயர்த்த விரும்பி, அதன் அடிப்படையில் 2022 ஜூலை மாதம் 18ல் ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்தது.

ஏற்கனவே வீடுகளுக்கு 400 யூனிட் வரை , 1 யூனிட்டிற்கு 4.50 ரூபாய், 401 முதல் 500 வரை யூனிட்டிற்கு 6 ரூபாய். 501 முதல் 600 வரை யூனிட்டிற்கு 8 ரூபாய், 601 முதல் 800 வரை யூனிட்டிற்கு 9 ரூபாய், 801 முதல் 1,001ற்கு மேல் யூனிட்டிற்கு 11 ரூபாய் என்று கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. தற்சமயம் மீண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவது என்பது மக்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்துயுள்ளது. கடந்த ஆண்டில் ஆணையம் பிறப்பித்த மின் கட்டண உயர்வு ஆணையில், 2026 முதல் 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version