ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற முதல் பதக்கங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

1900ஆவது ஆண்டு முதல், ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் இந்தியாவின் முதல் பதக்கங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

சுதந்திரம் அடைவதற்கு முன்பு, முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர், இந்தியாவில் பிறந்த ஒரு பிரிட்டிஷ்காரர் நார்மன் பிரிட்சர்ட். 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக பங்கேற்ற அவர், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தலா ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.


இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தனிநபராக பதக்கம் வென்ற முதல் இந்தியர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கஷாபா ஜாதவ். இவர் 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்தியா சார்பில் தனிநபராகப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை ஆந்திராவை சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி. இவர், 2000 சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 2000 ஒலிம்பிக்கில்தான் மகளிருக்கான பளுதூக்கும் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

தனிநபராக தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அபிநவ் பிந்த்ரா. 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில், இவர் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்தினார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அபிநவ் பிந்த்ரா, ஒலிம்பிக் பேரணியில் இந்தியக் கொடியை ஏந்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

நார்மன் பிரிட்சர்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற தனிநபர் டெல்லியைச் சேர்ந்த மல்யுத்த வீரர் சுஷில்குமார் மட்டுமே.

115 வீரர், வீராங்களைக் கொண்ட இந்திய குழு வருகிற 14ஆம் தேதி டோக்கியோ புறப்படுகிறது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அதிக பதக்கங்களை இந்தியா கைப்பற்றும் என இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நமது வீரர்கள் பதக்கங்களை வென்ற தருணங்களின் காட்சிப்பதிவை காண

↕↕↕↕↕↕↕↕↕↕↕↕

Exit mobile version