Heroin,Cocaine,Ecstasy,LSD,MagicMushroom,Cannabis,Opioids,Tranquilizers,Liquor என பல வகை-25 கோடி பேர் போதைக்கு அடிமையா???

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பழக்கத்திற்கு எப்படி அடிமையாகின்றனர்? அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…


உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25 கோடி பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது. மது மற்றும் புகையிலைப் பொருட்களை உபயோகிப்பது சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில், கஞ்சா, அபின், கோகைன், பிரவுன்சுகர் ஆகியவையும் இளைய சமுதாயத்தை விட்டுவைக்கவில்லை. ஒரு கட்டத்தில் போதைப்பழக்கத்தை விட முடியாமல் தற்கொலையில் முடியும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.


தற்போது உலகளவில் சட்டவிரோதமாக போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை செய்தல் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இன்னும் அது தொடர்ந்து கொண்டே வருகிறது.

மதுவுக்கு அடிமையாவதற்கு காரணங்கள் தான் என்ன…?


காதல் தோல்வி, குடும்பத்தில் பிரச்னை, வேலையின்மை, மது அருந்துவது ஓர் நாகரீகம் மன அழுத்தம், கடன் சுமை, அதிக வேலை பளு என இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்வார்கள் மதுப்பிரியர்கள்… கல்யாணம் ஆனாலும் சரி, சாவானாலும் சரி… போதை தேவை என கூறுகிறார்கள் தற்காலத்து இளைஞர்கள்…


போதைப்பழக்கம் உடல்நலத்தை மட்டும் கெடுத்துக் கொள்வதல்ல போதைப் பழக்கம்… பண விரயம், குடும்பத்தில் பிரச்னை, குழந்தைகளின் சூழல் பாதிக்கப்படுவது என தன்னை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கிறது.

குடி குடியைக் கெடுக்கும், புகைப்பழக்கம் உடல் நலத்துக்குக் கேடு என மதுபாட்டில்களிலும் சிகரெட் பாக்கெட்டுகளிலும் அச்சடித்து வைத்தால் மட்டும் போதாது. எவ்வளவு தான் மதுப்பிரியர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பினாலும், அங்கிருந்து வந்து சில நாட்களிலேயே மதுவுக்கு அடிமையாவது வழக்கமாகி விட்டது. ”திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது”… போதைப் பழக்கத்தில் இருந்து தானே விடுபட வேண்டும் அல்லது அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு…

Exit mobile version