டெட்ரா பேக் மூலம் அறிமுகமாகப்போகும் சரக்கு! அடுத்த செ.பாலாஜி ஆகிறாரா அமைச்சர் முத்துச்சாமி!

செந்தில்பாலாஜிதான் இப்படினு பாத்தா மதுவிலக்குத் துறை யார் கையில் இருந்தாலும் பஞ்சாயத்துதான் போல என்று அமைச்சர் முத்துச்சாமியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். ”இந்த செவுரு யாரையும் காவு வாங்காம விடாது”னு  மதுவிலக்குத்துறையை  மீம்ஸ்கள் மூலம் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். சரி அப்படி அய்யா முத்துச்சாமி என்னதான் செய்து வைத்திருக்கிறார் என்று பார்த்தால், குவாட்டரை சரிசமமாக பிரித்து குடிக்கத் தெரியாத நமது மது பிரியர்களுக்காக 90 எம்.எல் அளவிலான டெட்ரா பேக் மூலம் மதுவை விநியோகம் செய்ய ஆயத்தமாகியிருக்கிறார் இந்த புதிய ஆயத்தீர்வை அமைச்சர்.

மாட்டிக்கொண்ட அமைச்சர் முத்துச்சாமி…!

சமீபத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளில் மது வாங்கியவர்கள், வேறு கடைகளுக்கு செல்கின்றனரா, குடிப்பழக்கத்தை விட்டுவிட்டனாரா, கள்ளச்சாராயத்தினை அருந்துகின்றனரா போன்றவை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்று அமைச்சர் செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.

இதை மட்டும் பேசியிருந்தால் அமைச்சர் சரியாக பேசுகிறார் என்று விட்டிருக்கலாம். ஆனால் ஒரு வெடிகுண்டைத் தூக்கி போட்டார் பாருங்க. அதாவது மதுப்பிரியர்கள் குடிப்பழக்கத்தை விட்டால் அரசுக்கு மகிழ்ச்சி. வேறு டாஸ்மாக்கில் மது வாங்கினாலும் பரவாயில்லை. ஆனால் தவறாக வேறு எங்கும் சென்று விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் கண்காணிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இங்கு நமது கேள்வி என்னவென்றால், அய்யா குடிப்பழக்கத்தை விட்டால் நல்லது என்று சொல்கிறீர்கள். ஆனால் டாஸ்மாக்கில் மது வாங்கினால் பரவாயில்லை என்கிறீர்கள். இப்போது மதுப்பிரியர்கள் மதுவை குடிக்கலாமா? வேண்டாமா? என்று ஒரு முடிவைச் சொல்லுங்கள். ஆனால் மதுவை மக்கள் விட்டுவிட்டால் திமுகதான் மாட்டிவிடும். அதிலும் டெல்டா மாவட்டத்தினைச் சேர்ந்த திமுகவின் எம்.பி மற்றும் அவரது வாரிசு அமைச்சர் இருவரும் மாட்டிக்கொள்வார்கள். சாராய ஆலைகளை வைத்து நடத்தும் அவர்கள் பொழப்பில் எப்படி மண் அள்ளிப்போடும் திமுக. தன் சொந்தக் கைகளை வைத்தே கண்ணைக் குத்திக்கொள்ள யாராவது விரும்புவார்களா என்ன? சரி என்ன செய்யலாம் என்று யோசனை செய்த அமைச்சர் டெட்ரா பேக்கில் வைத்து விற்றுவிடலாம் என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

டெட்ரா பேக்கில் சரக்கு..!

திடீரென்று மதுவினை டெட்ரா பேக்குகளில் வைத்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது ஏன் என்று கேட்டால், அமைச்சர் அதற்கும் ஒரு பதில் வைத்துள்ளார். மது பாட்டிலை சாலையில், நீர்வழித்தடத்தில் போடுவதால் விவசாயிகளுக்கு பிரச்சினையாக உள்ளது. மது பாட்டிலுக்கு பதில், டெட்ரா பேக்கில் மது விற்பனை வர வேண்டும்; அப்படி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று பலரும் விரும்புகின்றனர் மற்றும் அதனை கையாள்வதும் சுலபம் என்று அமைச்சர் முத்துச்சாமி கூறியுள்ளார்.

நீர்வழித்தடத்தில் குடிமராமத்துபணியினை மேற்கொள்ளாமல் டெட்ரா பேக்கினை அறிமுகம் செய்வதற்காக ஒரு சப்பைக்கட்டு காரணத்தை கூறியிருக்கிறார் அமைச்சர் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

இதைவிட ஒரு நகைச்சுவை ஒன்றை கூறினார் நமது அமைச்சர். அதாவது மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 180 மிலி கொண்ட குவார்டர் பாட்டிலை பகிர்ந்து கொள்வதற்கு மற்றொருவர் வருகைக்காக மதுப்பிரியர்கள் காத்திருக்கின்றனர். எனவே டெட்ரே பேக் கொண்டுவந்தால் 90 மிலிக்கு மதுவானது பாக்கெட்டில் அடைக்கப்பட்டால் இந்த பிரச்சினையானது தீர்ந்துவிடுமாம்.

அய்யா அமைச்சர் அவர்களே, நாட்டிலே எவ்வளவுப் பிரச்சினை உள்ளது. இதுவெல்லாம் ஒரு பஞ்சாயத்து என்று விளக்கம் வேறு கொடுத்துள்ளீர்கள். ஆமாம், நாங்கள் டெட்ரா பேக் மூலம் மது விறக்ப்போகிறோம் என்று சொல்லியிருந்தால் பிரச்சினை முடிந்தது. அதற்கு இப்படி ஒரு காரணத்தைச் சொல்லும்போதுதான் இவர் சரியாகத்தான் பேசுகிறாரா? இல்லை உளறுகிறாரா? என்று கேள்வி எழுகிறது.

Exit mobile version