பொதுச்செயலாளர் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..! பாஜகவுடனான கூட்டணியும் தொடர்கிறது..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக உடனான கூட்டணித் தொடர்கிறது என்று கூறினார். ஏற்கனவே அமித் ஷாவும் இந்த செய்தியை தனியார் ஊடகம் வாயிலாக தெரிவித்த நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் வழியில் நாடாளுமன்றத் தேர்தலை அணுக ஆயத்தமாகிவிட்டது அதிமுக. அனைத்துக் கட்சியினருக்கும் முன்பே முதல் ஆளாக தேர்தல் பணியில் புரட்சித் தலைவி அவர்கள் களம் காணுவார்கள். அதனைத் தொடர்ந்து அவரின் வழியில் புதிய பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களும் தயாராகிவிட்டார். இது அதிமுகவின் சுறுசுறுப்பினைக் காட்டுகிறது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக புதிய பொதுச்செயலாளரின் தலைமையில் புத்தெழுச்சிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

Exit mobile version